திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் விசாலாட்சி சமேத நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. திருமணத் தடை நீங்கும் பரிகார ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசாலாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா இன்று ( 22.07.2023 ) விமரிசையாக நடைபெற்றது. விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு
தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.