மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 29ம் தேதி மலையன் ராட்சத அணில்கள் இரண்டை கடத்தி வந்த மலேசியாவைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவரையும் அணில்களையும் திருச்சி விமான நிலைய சுங்க இலாக அதிகாரிகள் , திருச்சி வனச்சரக அலுவலாிடம் ஒப்படைத்தனா். திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் உத்தரவுபடியும், திருச்சி வனச்சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை உயிரினமான மலேசியன் ராட்சத அணில்கள் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் தனிக்குழு அமைக்கப்பட்டது. விசாரணையில் அணில்களை கடத்த உடந்தையாக இருந்த கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சேர்ந்த சாகுல் அமீது (28) மற்றும் அணில்களை வாங்க வந்த சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் (29), ஆகிய இரண்டு பேரையும் திருச்சி வனத்துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த தனிப்படையில் வனவர்கள் பாலசுப்பிரமணியன், துளசி மலை வனக்காப்பாளர்கள் ராஜ்குமார்,சரவணன் மற்றும் வன காவலர்கள் சுகன்யா,வேலாயுதம்,செல்லதுரை ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அணில்கள் சென்னை கிண்டி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.