Rock Fort Times
Online News

திருவண்ணாமலை தீபத் திருவிழா: தரிசனத்திற்கு இன்று முதல் இலவச முன்பதிவு…!

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பரணி மற்றும் மகா தீபத்தை தரிசிக்க இந்த ஆண்டு 3,000 இலவச நுழைவுச் சீட்டுகள் இணையவழி மூலம் வழங்கப்படவுள்ளன. பரணி தீபத்திற்கு 1,000 சீட்டுகளும் (உள்ளூர் 500, பிற மாவட்டங்கள் 500), மகா தீபத்திற்கு 2,000 சீட்டுகளும் (உள்ளூர் 1,000, பிற மாவட்டங்கள் 1,000) வழங்கப்படுகின்றன. எனவே annamalaiyar.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இன்று 18.11.2026 காலை 11 மணி முதல் 20.11.2026 மாலை 3 மணி வரை முன்பதிவு செய்யலாம். 20.11.2026 மாலை 4 மணியளவில் கணினி குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோருக்குக் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மின்னணு நுழைவுச் சீட்டு (e-Ticket) அனுப்பப்படும். கோயிலுக்குள் செல்லும்போது ஆதார் அட்டை கட்டாய அடையாளச் சான்றாகச் சரிபார்க்கப்படும். பரணி தீபத்திற்குப் பதிவு செய்பவர்கள் மகா தீபத்திற்கும், மகா தீபத்திற்குப் பதிவு செய்பவர்கள் பரணி தீபத்திற்கும் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியாது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்