பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (இ.சி.எஸ்.ஆர்) ரசீதைப் பெறும் புதிய வசதியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்( டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால் இன்று (நவ. 18) அறிமுகப்படுத்த உள்ளார். வழக்கமாகப் பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தால், காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சி.எஸ்.ஆர் (CSR) எனப்படும் சமூக சேவைப் பதிவேடு ரசீதைப் பெற வேண்டிய சூழல் இருந்து வந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ‘e-CSR’ திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தபடியே ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்து, உடனடியாக மின்னணு ரசீதைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்தச் சேவை www.police.tn.gov.in என்ற இணையம் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் பொதுமக்களின் அலைச்சல் மற்றும் நேரம் மிச்சமாவதுடன், புகார்கள் மீதான நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.