தமிழகத்திற்கான நிலுவை கல்வி நிதி ரூ.5,000 கோடியை விடுவிக்க வேண்டும் … – மத்திய அமைச்சரை சந்தித்து அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை!
டெல்லி சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்குமார், மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கான நிலுவையில் உள்ள கல்வி நிதியான சுமார் ரூ.5,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதி நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில், அதை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தமிழக அரசின் கோரிக்கைகள் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.