திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி. நிதி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக எந்த பணியையும் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு நிதியில் இருந்து மாநகராட்சி பணிகளுக்கு ரூ.1 கோடி ஒதுக்க உள்ளோம். பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆளுநர் ரவி, தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வரம்பு மீறி செயல்படுகிறார். தொழில் முதலீட்டுக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்ல கூடாது என்றால் பிரதமர் வெளிநாடு செல்லலாமா?. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.