திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 31). கேபிள் டிவி ஆபரேட்டர். இவர் தீரன்நகர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டுக்கு கேபிள் இணைப்பு கொடுப்பதற்காக சென்றார். பின்னர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் கேபிள் இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் கை பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது தந்தை சுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.