திருச்சி திருவானைக்காவல் காந்தி ரோடு மேம்பாலம் ஏறும் சாலையில் இன்று(10-04-2024) காலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ஸ்ரீரங்கம் பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அம்மா மண்டபம் வழியாக சென்று வருகின்றன. சாலையின் அடியில் செல்லும் டிரைனேஜ் குழாய் உடைந்து அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் வேகம் அதிகரித்து மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.