‘ஜெம்’ வீரமணிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் யாரையும் மிரட்டி பணம் வாங்கவில்லை…* ஜான்பாண்டியன்…
‘ஜெம்’ கிரானைட் உரிமையாளர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது. பல சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவர்களை சீரழித்த விவகாரத்தில் பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுமிகளை சீரழித்த விவகாரத்தில் ‘ஜெம்” வீரமணி, இதற்கு உடந்தையாக இருந்த சாந்தி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த திமுக ஆட்சியிலே காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், தற்போதையே தவெக ஆட்சியில்தான் இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகியான ரஞ்சன்குமார், வீடியோ ஆதாரத்துடன் கடந்த 2024ம் ஆண்டே இதுதொடர்பான குற்றச்சாட்டை அப்போதைய காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஜான் பாண்டியனுக்கும் தொடர்பு இருப்பதாக ரஞ்சன்குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் இன்று (செப்டம்பர் 24) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், போக்சோ வழக்கில் சிக்கியுள்ள வீரமணிக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, தான் இந்த விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். ரஞ்சன் – சாந்தி இருவருமே இணைந்துதான் என்னை சந்தித்தனர். அதுவரை தனக்கு சாந்தியை யாரென்று தெரியாது என்றும்
தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விவகாரத்தில், தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பு குறித்த வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது” என்றும் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்தாலும் இந்த பாலியல் வழக்கில் போலீசாரின் பிடி இறுகுவதால் முக்கிய புள்ளிகள் விரைவில் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.

Comments are closed.