Rock Fort Times
Online News

துரோகிகளுக்கு இந்த இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்… இ.பி.எஸ். பரப்புரை….!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கரூர் சம்பவத்தின்போது விஜய் 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
வீட்டை விட்டு வெளியே வராத ஒரு கட்சியின் தலைவர் இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவார் என்பதை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “நீங்களா நாட்டை காப்பாற்றப் போகிறீர்கள்?. வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்துச் செல்வது போல், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை அள்ளிச் சென்று விட்டனர். இந்திய வரலாற்றிலேயே எம்.எல்.ஏ ஆகி வெறும் 12 நாட்களுக்குள் கட்சி மாறுகிறார் என்றால் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், கட்சிக்குத் துரோகம் இழைத்த மரகதம் குமரவேலுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்