Rock Fort Times
Online News

தொழிலாளி வீட்டில் திருட்டு…!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் அப்துல். இவரது மகன் முகமது அஜிஸ். கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முகமது அஜிஸ் காலை எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்துள்ளது. அதில் வைக்கப்பட்டிருந்த 1 அரை பவுன் மோதிரம்
மற்றும் ரூ.2500ஐ மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இந்த திருட்டு குறித்து லால்குடி போலீஸ் நிலையத்தில் முகமது அஜிஸ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்