அயோத்தியில் ராமர் கோவில் மஹா கும்பாபிஷேகம் வருகிற (22-01-2024) நடக்கிறது. இதில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக ரயில் மற்றும் விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அந்த கோவில் நிர்வாகத்தின் வேண்டுதலுக்கு இணங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறிய அளவில் ஒரு லட்சம் லட்டுகளை தயாரித்து அங்கு அனுப்பி வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த லட்டுகளை பேக்கிங் செய்யும் பணியில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பை சேர்ந்த சுமார் 100 சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாளை(20-01-2024) மாலை இந்த பணிகள் முடிவடைந்து உடனடியாக அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
1
of 872
Comments are closed, but trackbacks and pingbacks are open.