நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கி உள்ளன. இதற்கெல்லாம் ஒரு படி மேலாக திமுக தேர்தல் பணி குழுவை நியமித்துள்ளது. 3 பிரிவுகளில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர்கள் கே. என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி .ஆர்.பி.ராஜா, கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி, எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக தி.மு.க.பொருளாளர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக கே.என்.நேரு, இ.பெரியசாமி, பொன்முடி, ஆ. ராசா எம்பி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கண்ட தகவலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1
of 872
Comments are closed, but trackbacks and pingbacks are open.