3 நாள் பயணமாக இன்று (19-01-2024) தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். தொடர்ந்து, நாளை( 20-01-2024) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இந்நிலையில் இன்று இரவு முக்கிய பிரமுகர்களை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்பட பல மாநில நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்று தெரிகிறது. தமிழகத்தில் பா.ஜனதாவின் செயல்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் நிலவரங்கள் குறித்து அரசியல் ரீதியிலான கருத்து பகிர்வுகள் இந்த சந்திப்பின்போது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.