Rock Fort Times
Online News

விவாகரத்து புகாரில் இன்ஜினீயர் ஒப்படைத்த 90 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!

மதுரை மாவட்டம், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் கீதா. திருமங்கலம் பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் ராஜேஷ் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அபிநயாவிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இதை, ஆய்வாளர் கீதா விசாரித்து வந்தார். இந்நிலையில் திருமணத்தின்போது தனது பெற்றோர் போட்ட நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா, ஆய்வாளர் கீதாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து 95 பவுன் நகைகளை ராஜேஷ் ஆய்வாளர் கீதாவிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒப்படைத்தார் . அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல் ஆய்வாளர் கீதா காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜேஷ் புகார் அளித்தார். விசாரணையில் அனைத்து நகைகளையும் காவல் ஆய்வாளர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நகையை திருப்பி தருவதற்கு ஆய்வாளர் கீதா அவகாசம் கேட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் சிலவற்றை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த டி.ஐ.ஜி.ரம்யாபாரதி, ஆய்வாளர் கீதாவை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்