Rock Fort Times
Online News

பாரம்பரியம் மாறாமல் கரூரிலிருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு வந்த கிராம மக்கள்…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். சிலருக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் குலதெய்வ கோயிலாகவும் உள்ளது. அந்தவகையில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை பகுதியை சேர்ந்த ஏழு ஊர் கிராம மக்கள் காலம் காலமாக பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து மேலூரில் தங்கி இருந்து பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி தரிசித்து செல்கின்றனர். அவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு வருவதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் குளித்தலை தாலுகாவிலிருந்து வடசேரி, புதுப்பட்டி, கல்லுப்பட்டி, சங்காயிபட்டி, கீழவெளியூர் மற்றும் ஏழு ஊரிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி மற்றும் டிராக்டரில் நேற்று 14ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு இன்று காலை 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். அவர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகே உள்ள மேலூரில் தங்கி, அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு ரெங்கநாதருக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்