Rock Fort Times
Online News

அண்ணா பிறந்த நாளில் “தாய்மாமன் சீர் திட்டம்” தொடங்கப்படும்…* தமிழக பட்ஜெட்டில் தகவல்! 

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (05.08.2026) காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடியது. அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181 – 1ன் கீழ்,  2026 – 27ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.  அப்போது அவர், “பிறபொக்கும் எல்லா  உயிருக்கும்” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டுப் பேசுகையில், “உண்மையான சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. திட்டங்களை  நிறைவேற்றுவதற்கான கால வரம்பை 3 வகைகளாகப் பிரித்து செயல்திட்டம் வகுக்கப்படும். திட்டங்களை  நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் குறைவாகவே உள்ளது.  தமிழ்நாட்டின் கடன் கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. செப்டம்பர்  15ம் தேதியான அண்ணா பிறந்த நாளில் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பட்ஜெட்டை வாசித்து வருகிறார். நாளை (06.08.2026) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் .

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்