திருச்சி தென்னூர் அண்ணா நகர் சிவப்பிரகாசம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பீமன் என்கிற முருகன் (வயது 54) என்பவரும், இவரது நண்பர் மகேஷும் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது எதிரே டேபிளில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த 4 பேர் கடும் சத்தத்துடன் பேசிக் கொண்டு மது அருந்தி உள்ளனர். இதனை பீமனும், அவரது நண்பர் மகேஷ்ம் மெதுவாக பேசும்படி கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்த நவீன்குமார் ( 29) மற்றும் அவருடைய நண்பர்கள் மூவரும் சேர்ந்து பீமன் மீது பீர் பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தில்லை நகர் போலீசில் பீமன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நவீன்குமார் ரவுடி என்று கூறப்படுகிறது.

Comments are closed.