திருச்சி, திருவெறும்பூரில் பத்திரப்பதிவுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ! பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை…
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், திருவெறும்பூர் அருகேயுள்ள நவல்பட்டில் தனக்கு சொந்தமான இரண்டு பிளாட்டுகளை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.அதன்படி நேற்று ( மார்ச்-1 ) திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இடத்தை பத்திரப்பதிவு செய்ய முடிவெடுத்தனர். இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் கடந்த பிப்ரவரி – 27 அன்று திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் சபரிராஜனிடம் இதுதொடர்பாக பேசியுள்ளார். சார் பதிவாளர் சபரிராஜன் ஒரு பத்திரத்திற்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கறார் காட்டியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் இதுகுறித்து புகாரளித்தார்.டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் திருவெறும்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றனர். பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணனிடமிருந்து சார்பதிவாளர் சபரிராஜன் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.மேலும் இதுபோன்று வேறு யாரிடமாவது லஞ்சம்பெற்றுள்ளாரா? என விசாரித்து வருகின்றனர். திருச்சி, திறுவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைனரால் சப் ரெஜிஸ்டர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.