Rock Fort Times
Online News

இன்று (மார்ச் 19) நடக்க இருந்த ரெயில்வே தேர்வு திடீர் ரத்து- தேர்வர்கள் அதிர்ச்சி…!

ரெயில்வே துறையில் காலியாக உள்ள லோகோ பைலட் உள்ளிட்ட பணிகளுக்கு, குரூப்-டி நிலையிலான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு இன்று (மார்ச் 19) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு மையங்களுக்குச் சென்ற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் 18,799 பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித் தேர்வு முடிவடைந்து முடிவுகள் வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும் நாளையும் (மார்ச் 19, 20) இரண்டாம் நிலை கணினித் தேர்வு நடைபெற இருந்தது. இதற்காக தேர்வர்கள் இன்று காலையே தேர்வு மையங்களுக்குச் சென்றனர். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வுக்கு சற்று நேரம் முன்னதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று நடைபெறவிருந்த தேர்வு வேறு நாளில் நடத்தப்படும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு ரெயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பால் தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்