Rock Fort Times
Online News

காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்…!

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பிறகு தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், அவரை காவல்துறையினர்
தீவிரமாக தேடி வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதப்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை நேற்று இரவு கைது செய்த தனிப்படை போலீஸார் சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். நள்ளிரவு விசாரணை செய்த பின்னர் சென்னை எம்.கே.பி. நகரில் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது, அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயன்றார். அவரை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளரை, பாம் சரவணன் கத்தியால் குத்தினார். இதனால், போலீசார் ரவுடி பாம் சரவணன் மீது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவரிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு பட்டாக்கத்தி மற்றும் 5 கஞ்சா பண்டல்களை தனிப்படை போலீஸார் கைப்பற்றினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்