திருச்சி கருமண்டபத்தில் உதயம் சூப்பர் மார்க்கெட் புதிய கிளை…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தார்...!
தமிழகத்தில் சிவகங்கை, காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உதயம் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திருச்சியில் கருமண்டபம் மெயின் ரோடு பகுதியில் புதிய கிளை திறப்பு விழா இன்று(20-3-2024) நடைபெற்றது. புதிய கிளையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வீ.கோவிந்தராஜுலு திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஸ்ரீ ஜெயநாதன் சிட்பண்ட்ஸ் மேனேஜிங் டைரக்டர் ஆறுமுகம் குத்து விளக்கு ஏற்றினார்.

விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், ஸ்ரீ சிவநாதன் சிட் பண்டு நிர்வாக இயக்குனர் கே.நடராஜன் மற்றும் வியாபார சங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உதயம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் குமாரப்பன் மற்றும் அவரது மனைவி ரேவதி அனைவரையும் வரவேற்றனர். கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் எதிரே திறக்கப்பட்டுள்ள உதயம் சூப்பர் மார்க்கெட்டில் கிப்ட், ஸ்டேஷனரி, பிளாஸ்டிக் பொருட்கள், ஹோம் அப்ளையன் சஸ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

pad.stuve.de
திரà¯à®à¯à®à®¿ à®à®°à¯à®®à®£à¯à®à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¤à®¯à®®à¯ à®à¯à®ªà¯à®ªà®°à¯ மாரà¯à®à¯à®à¯à®à¯ பà¯à®¤à®¿à®¯ à®à®¿à®³à¯…! – Rockfort Times