திருச்சி ராமகிருஷ்ணன் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் மாணவிக்கு குழந்தை பிறந்த விவகாரம்: கல்லூரி நிர்வாகம் மீது பெற்றோர்கள் சரமாரி கேள்வி..!
திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் திருச்சி ராமகிருஷ்ணன் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். சிலர் கல்லூரி விடுதியிலும் தங்கி பயின்று வருகின்றனர். அந்தவகையில் இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிக்கு இன்று (மே 15) பரீட்சை எழுதிக் கொண்டு இருக்கும் போது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவறைக்கு சென்ற அவர், அங்கு ஆண் குழந்தை பெற்றெடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை உயிரிழந்தது.
குழந்தை பெற்றெடுத்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அவர் எப்படி
கர்ப்பமானார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம், சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க அந்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி படித்து இருக்கிறார். அவர் 10 மாதம் வரை கருவை வயிற்றில் சுமந்து இருக்கிறார்.
ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களில் வயிறு பெரிதாக தெரிய ஆரம்பித்து விடும். அந்தக் கரு
வளர்ந்து ஒரு குழந்தை பெற்றெடுக்கும் அளவுக்கு நிலைமை வந்திருக்கிறது என்றால் கல்லூரி நிர்வாகம் எந்த அளவுக்கு மாணவ, மாணவிகள் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டு இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. இதனை கல்லூரி நிர்வாகத்தினரும், விடுதி காப்பாளரும், பேராசிரியர்களும் ஏன் கண்டறியவில்லை. அந்த மாணவி வீட்டில் இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து சென்றவர் என்றால் இந்த கேள்விக்கு இடமில்லை. ஆனால், அவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தவர் என்பதால் தான் இந்தக் கேள்வியே. ஒரு மாணவி விடுதியில் தங்கி படிக்கிறார் என்றால் அதற்கு கல்லூரி நிர்வாகமும், விடுதி கண்காணிப்பாளர்களும் தானே பொறுப்பு. கல்லூரி நிர்வாகத்தை நம்பித்தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அவர்கள் இதுபோன்ற விஷயங்களை கண்டும், காணாதது போல இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இதனை முன்கூட்டியே கண்டறிந்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம், அல்லது அந்த மாணவியை அழைத்து விசாரணை நடத்தி இருக்கலாம். இதனை எதுவுமே கல்லூரி நிர்வாகம் செய்ததாக தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்களால் அந்த கல்லூரியில் படிக்கும் பிற மாணவ, மாணவிகளுக்கும் தலைகுனிவு தானே. இந்த விஷயத்தில் கல்லூரி நிர்வாகம் என்ன செய்து கொண்டு இருந்தது, என்று கேள்வி எழுப்பிய பிற மாணவர்களின் பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Comments are closed.