Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை….

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று ( 20.09.2023 ) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காசியன் வீட்டில் இந்த சோதனை நடந்து வருகிறது. மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். செந்தில் பாலாஜியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்