திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பங்கேற்ற கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ் நிர்வாகிகளால் பரபரப்பு…!
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அந்த கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இதனால், துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த துரை வைகோ, நான் செத்தாலும் எங்களது சின்னத்தில் தான் போட்டியிடுவேன், வேறு எந்த சின்னத்திலும் போட்டியிட மாட்டேன் என்று கண் கலங்கியபடி கூறினார். அவரது இந்த பேச்சு திமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருச்சி தொகுதியை காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டுமென மூத்த நிர்வாகிகள் சிலர் கேட்டு வந்தனர். ஆனால் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் கட்சியின் மேலிட கட்டளையை ஏற்று அனைவரும் கட்சிப் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலராஜ் புதல்வரும், திருச்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான ஜோசப் லூயிஸ் தலைமையில் திருச்சி ஆர்.சி. பள்ளி அருகே உள்ள டி.எம்.எஸ்.எஸ்.எஸ். அரங்கத்தில் இன்று(30-03-2024) காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க சார்பில் திருச்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இதில், முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் ஜவகர்,
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனீவாசன், கள்ளிக்குடி சுந்தரம், வக்கீல் எம்.சரவணன், முன்னாள் மேயர் சுஜாதா, சிக்கல் சண்முகம், மெய்ய நாதன், புத்தூர் சார்லஸ், கோட்டத் தலைவர்கள் ரவி, சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்டு, ஓவியர் கஸ்பர், ஆனந்தராஜ், ராஜ்மோகன், பீமநகர் காசிம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் மாநகர தலைவர் ரமேஷ் சந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஹேமா, பொதுச் செயலாளர் சிவா, விக்டர், எத்திராஜ் மலைக்கோட்டை சேகர், சரவணன், சேவாதளபொதுச் செயலாளர் ஜெகதீஸ்வரி, செயலாளர் அப்துல் குத்தூஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதிமுக சார்பில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், மாவை மகேந்திரன், மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர்கள் எல்.ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜ், கலை மற்றும் பலர் புறக்கணித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.