Rock Fort Times
Online News

கல்வி உதவித்தொகை பணிகளை முடிக்காத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை..

கல்வி உதவித்தொகை பெறும்மாணவர்களின் விவரங்களை வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வி உதவித் தொகை பெறும் பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகைய தலைமை ஆசிரியர்கள் மீது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெறும்மாணவ, மாணவிகளின் ஆதார் விவரம் வங்கிக் கணக்குகளுடன்இணைக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்களின் ஆதார் எண் உட்பட அடிப்படை தகவல்கள் இன்னும் பதிவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், இல்லம் தேடிக் கல்விதன்னார்வலர்கள் இந்த பணிகளைவிரைந்து முடிக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுசார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்