Rock Fort Times
Online News

திருச்சி பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டியை கண்மூடித்தனமாக தாக்கிய சிறுவர்கள் – வீடியோ இணைப்பு

திருச்சி ஜி.ஹெச் குழுமாயி அம்மன் கோவில் செல்லும் வழியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட அலுவலகம் உள்ளது. இங்கு கோட்டைசாமி(52) என்பவர் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார் . இவர் நேற்று இரவு பணியிலிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு சிறுவர்கள், அநாகரிகமாக பேசிக்கொண்டு சென்று உள்ளனர். அப்பொழுது கோட்டைசாமி அவர்களை அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அது கை கலப்பாக மாறி, சிறுவர்கள் நான்கு பேரும் காவலாளியை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த கோட்டை சாமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து பாஜகவினர், காவலாளியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே செக்யூரிட்டி கோட்டைச்சாமியை தாக்கிய சிறுவர்கள் மீது அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்