திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்க மாநகர போலீஸார் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் பகுதியில் கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக பைக்கை வாலிபர் ஒருவர் ஓட்டி வந்தார். அவர் வருவதை பார்த்த போலீசார் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததோடு வாகன சோதனையில் இருந்த இன்ஸ்பெக்டர் மீது வாகனத்தை மோதிவிட்டுசிறிது அந்த வாலிபரும் வாகனத்துடன் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் அன்பழகனின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மீது இருசக்கர வாகனத்தை மோதிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.