Rock Fort Times
Online News

தஞ்சை மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் அதிரடி நீக்கம்…!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக பதவி வகித்து வந்தவர் டாக்டர்.ப.இராமநாதன். இவர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் மாவட்ட கழக செயலாளர் மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து இன்று (23.03.2024) முதல் நீக்கப்படுகிறார். இவருடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக செங்குட்டுவன் நியமனம் செய்யப்படுகிறார்.
இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கட்சி வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்