Rock Fort Times
Online News

‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் : டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு…!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டரை தமிழக அரசு கோரி உள்ளது. அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதியிலிருந்து திட்டம் நடைமுறைக்கு வரும் என முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் 22 கேரட் 916 ஹால்மார்க் தரச் சான்றுடன் மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு
ரூ.755.53 கோடி ஒதுக்கப்பட்டு  அதற்கான டெண்டர் சுகாதார துறை சார்பாக கோரப்பட்டுள்ளது. டெண்டரை பதிவு செய்வதற்கு கடைசி நாளாக 18.08.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு டெண்டர் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்