Rock Fort Times
Online News

ரூ.100 கோடிக்கு மேல் மோசடி: திமுக நிர்வாகி அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அரசகுமார். இவர், தி.மு.க.,வின் செய்தி தொடர்புக் குழு துணை தலைவராக உள்ளார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை போலீசார் அரசகுமாரை கைது செய்தனர். அவர் மீது, 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்து இருப்பதால், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி, போலீசார் நேற்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, லஞ்சம் பெறப்பட்டதாக போலீசில் புகார் அளித்த, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமாருக்கு, முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘வக்கீல் நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார். வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பதாக, வக்கீல் நோட்டீசுக்கு, நந்த குமார் பதில் அனுப்பி உள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்