Rock Fort Times
Online News

தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் ஆர்ப்பாட்டம்…!

தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை சங்கம், அனைத்து விஸ்வகர்ம சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பட்டுக்கோட்டை நகை தொழிலாளி தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . திருச்சி மரக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்றார். வக்கீல்கள் பாலசுப்பிரமணியன், தினேஷ் பாபு, அகஸ்டின், செந்தில், ஆறுமுகம், சண்முகம், இளையராஜா, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் சந்திரசேகர், மாரியப்பன், பேராசிரியர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் சுகுமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் மாநகரத் தலைவர் சாத்தையன் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்