திருச்சி பாலக்கரையில் அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறக்க வேண்டும் என்று திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் , ஸ்ரீரங்கம் 2 வது வார்டு கவுன்சிலருமான வி. ஜவகர் , திருச்சி மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் சீனிவாசன், ஸ்ரீரங்கம் காங்கிரஸ் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் கருணா மூர்த்தி, பீமநகர் நாராயணசாமி, காசிம், எடத்தெரு பாலாஜி, மாதவன், கோபால், சுவாமியாதவ் மற்றும் பலர் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.