Rock Fort Times
Online News

துணை தாசில்தார்களும் வருவாய் சான்றிதழ்கள் வழங்க அதிகாரம் வழங்கியது தமிழக அரசு…!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் (TNeGA) இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் 26 வகையான மின்னணு சான்றிதழ் சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் வழங்கி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்காக வருவாய் சான்றிதழ்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தாசில்தார்களுக்கு விண்ணப்பங்களின் பணிச்சுமை அதிகரித்து, சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், துணை தாசில்தார்கள் சில சான்றிதழ்களை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. தாசில்தார் வழங்கி வந்த 12 வகையான சான்றிதழ்களை இனி துணை தாசில்தார் நிலையிலேயே வழங்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவை, முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ், வேளாண் வருமானச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப இடம்பெயர்வு சான்றிதழ், சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ், பேரிடர்களால் கல்விச் சான்றுகள் இழந்ததற்கான சான்றிதழ் ஆகியவை ஆகும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்