தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் நன்றாக தயாராகி வருகிற திங்கட்கிழமை பதிலுரை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் பேசுகையில், “உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும்
திங்கட்கிழமை விளக்கமாக பதிலளிப்பேன். நான் பேரவையில் இல்லையென்றாலும் அனைத்து கேள்விகளும் எனக்கு வந்துவிடும். தெளிவான பதிலளிப்பேன். ஆனால், நான் பேசும்போது யாரும் ஓடக் கூடாது என சத்தியம் செய்யுங்கள்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பேரவையிலிருந்து முதல்வர் விஜய் புறப்பட்ட நிலையில்,”கடைசியாக யார் ஓடிப் போனார்கள் என்று அனைவரும் பார்த்திருப்பார்கள். நேரலை செய்தீர்களா எனத் தெரியவில்லை. நானும் 3 நாட்களில் தயாராகி வாருங்கள் என்றுதான் கூறினேன்” என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

Comments are closed.