சென்னை, எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக திருச்சி வழியாக செல்லும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- எழும்பூரில் இருந்து இன்று (03-09-2026), நாளை (04-09-2026), நாளை மறுநாள் (05-09-2026) ஆகிய நாட்களில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20665), 20 நிமி டம் தாமதமாக நெல்லை சென்றடையும்.
- எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி). நாளை (4-ந்தேதி). நாளை மறுநாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும்.
- தாம்பரத்தில் இருந்து இன்று (3-ந்தேதி) மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06109)
- 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக திருவனந்தபுரம் சென்டிரல் சென்றடையும்.
- தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்கனூர் சென்றடையும்.
இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.