Rock Fort Times
Online News

தமிழக முதல்வர் இன்று திருச்சி வருகை: போக்குவரத்தில் மாற்றம்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் இன்று(26-01-2024) நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
இதற்காக விமானம் மூலம் இன்று திருச்சி வருகிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு திருச்சியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக செல்ல வேண்டும். சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக குன்னம், அரியலூர், கீழப்பழுர், புள்ளம்பாடி, கொள்ளிடம் “ஒய்” ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி வட்டச்சாலை (ரிங்க் ரோடு), கும்பக்குடி வழியாக பஞ்சப்பூரை அடைந்து மதுரை பிரதான சாலை வழியாக செல்ல வேண்டும். மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், விராலிமலை வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.
சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் வழியாக செல்ல வேண்டும். கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர்,
கீழப்பழுர்,திருமானூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும். சேலத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மைக்கேல் நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழுர், திருமானூர், திருவையாறு வழியாக சென்று வர வேண்டும்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக குன்னம், அரியலூர், கீழப்பழுர், புள்ளம்பாடி, கொள்ளிடம் “ஒய்” ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி வட்டச்சாலை, கும்பங்குடி வழியாக புதுக்கோட்டை பிரதான சாலையை அடைந்து கீரனூர் வழியாக சென்று வரவேண்டும். தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி சுங்கச்சாவடி, வட்டச்சாலை வழியாக கும்பக்குடி, பஞ்சப்பூர் பகுதியை அடைந்து மதுரை பிரதான சாலை, விராலிமலை வழியாக சென்று வர வேண்டும். தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி சுங்கச்சாவடி, வட்டச்சாலை, பஞ்சப்பூர், மதுரைசாலை, விராலிமலை, மணப்பாறை சாலை வழியாக மணப்பாறை அரசு மருத்துவமனை, வையம்பட்டி வழியாக சென்று வரவேண்டும். சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளுர், கொள்ளிடம் “ஒய்” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும். சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் , வாகனங்கள் பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளுர், கொள்ளிடம் “ஒய்” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும். மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் கொள்ளிடம் “ஒய்” ரோட்டில் திரும்பி நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.
திண்டுக்கலிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் கொள்ளிடம் “ஒய்” ரோட்டில் திரும்பி, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும். இத்தகவலை மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவை அறிவித்துள்ளன.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்