30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 18 சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி த.ம.ஜ.க.சார்பில் திருச்சி மத்திய சிறை முன்பு போராட்டம்…!
தமிழக சிறைச்சாலைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 18 சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்படும் தமிழ்நாடு தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் கே.எம். சரீப் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர், திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட
முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்பு சிறை முன்பு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.