பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை…* திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அதிகாரிகளுக்கு உத்தரவு..!
திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 20) குறை தீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரித்துக் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த கூட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி , துணை ஆணையர் எம். அஜித்தா பர்வீன் , மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், நகர்நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.