திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்றது மாட்டுச்சந்தை. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெறும் இந்த மாட்டு சந்தையில் மாடுகளை விற்பதற்கு திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து மாட்டு வியாபாரிகளும், விவசாயிகளும் பெருமளவில் வருகை தருவார்கள். இந்நிலையில், சமீபகாலமாக மணப்பாறை மாட்டு சந்தையில் மாடுகளை விற்க – வாங்க வரும் வியாபாரிகளையும், விவசாயிகளையும் குறிவைத்து ஒரு மாட்டிற்கு ரூ. 400 முதல் ரூ.700 வரை முறைகேடாக குத்தகைதாரர்கள் கட்டணம் வசூலித்ததாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மணப்பாறை நகராட்சி ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டது.அதன் அடிப்படையில்
இந்த விவகாரம் குறித்து மணப்பாறை நகராட்சி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து, 2026 – 27ம் ஆண்டுக்கான மாட்டு சந்தை குத்தகை உரிமத்தை ரத்து செய்து மணப்பாறை நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments are closed.