சான்றிதழ் வழங்க இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை போட்ட சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: திருச்சி சிட்டி கமிஷனர் காமினி அதிரடி…!
திருச்சி சிட்டி கமிஷனராக காமினி ஐபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்து திருச்சியில் குற்றச் சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், குற்றச் செயல்களுக்கு துணை போகும் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வரும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நிலப்பத்திரம் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் மனுதாரருக்கு கண்டுபிடிக்க முடியாதது (Non traceable) என சான்றிதழ் வழங்க இன்ஸ்பெக்டர் கையெழுத்தை தானே போட்டுக் கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து திருச்சி சிட்டி கமிஷனர் காமினி
உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.