போலி விளம்பரங்கள் கொடுத்து மாணவர்களை ஏமாற்றினால் பயிற்சி மையங்கள் மீது கடும் நடவடிக்கை..!- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை…
டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி மற்றும் நீட் ஜே.இ.இ போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த தனியார் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு பணியில் சேர வேண்டும் என்கிற நோக்கத்தோடு பயிற்சி பெறும் இளைஞர்களை டார்கெட் செய்து, பல்வேறு கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிட்டு மாணவர்களை மூளைச்சலவை செய்து வருவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு குற்றச்சாட்டுகள் பறந்தது. இந்நிலையில் நீட், ஜே.இ.இ, மற்றும் அரசுப் போட்டி தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை கொடுத்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. அப்படி மீறி செயல்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது

Comments are closed.