பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங்(54) சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது ஆம்ஸ்ட்ராங்- ஐ இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Comments are closed.