திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை- திருச்சி எஸ்.பி….!
காணும் பொங்கலை முன்னிட்டு திருச்சி எஸ்.பி.செல்வ நாகரத்தினம் முக்கொம்பு சுற்றுலா மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருச்சி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான முக்கொம்பில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இன்று, காணும் பொங்கல் என்பதால் 75 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு அத்துமீறும் காதலர்கள் மற்றும் அவர்களிடம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காதலர்களுக்கு சில உரிமைகள் உண்டென்றாலும் பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு நடந்து கொள்ளும் காதலர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்சி முக்கொம்பு மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் விரைவில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட உள்ளது . இதற்கான அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவு கிடைத்தவுடன் சிசிடிவிகள் நிறுவப்படும். குற்றங்களை களையவும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆபரேஷன் அகழி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
Comments are closed.