Rock Fort Times
Online News

அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொதுமேலாளர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக பணியாற்றிய டி. சதீஷ்குமார், திருச்சி மண்டல பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று ( ஏப்.18 ) பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற பொதுமேலாளருக்கு போக்குவரத்துக்கழக பணியாளர்களும் அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருச்சி மண்டல பொது மேலாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன், மதுரை மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்