Rock Fort Times
Online News

புத்தகம் வாசியுங்கள்…உடல் நலம் பேணுங்கள்!- கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ் !

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தை பொறுத்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என, மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெயியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்., ” பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. கோடை விடுமுறையை மாணவ செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் அதிகம் பருகுங்கள். சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள். பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள். திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள். பெற்றோர் இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மனமகிழ்ச்சியோடு உங்களை அடுத்த வகுப்பிற்கு வரவேற்க காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்