ஸ்ரீரங்க ரங்கநாதர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாக்களின் ஒன்று சித்திரை தேர் திருவிழா. இம்மாதம் 26ம் தேதி நடைபெற உள்ள தேரோட்டத்திற்கு கொடியேற்றும் நிகழ்வு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி,இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் காலை 04.30 மணி முதல் 5:30 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 6:15 மணிக்கு நம்பெருமாள் கோடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4:30 மணி முதல் 5 30 மணி வரை பேரிடாதனம் நடைபெறுகிறது. பின்னர் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பட்டு,சித்திரை வீதிகள் வழியாக உலா வருகிறார். தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு சாந்தனு மண்டபம் சென்றடைகிறார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. 27ஆம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 28ஆம் தேதி ஆளும் பல்லக்குடன் சித்திரை தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed.