திருச்சி மாநகராட்சி மண்டலம்- 3-ல் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம்…
மேயர் அன்பழகன், மண்டல தலைவர் மதிவாணன் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சி மண்டலம்- 3 வார்டு எண்.40, 41, மற்றும் 42 ஆகிய வார்டுகளுக்கு சக்தி நகரில் “மக்களுடன் முதல்வர்“’ சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மண்டல தலைவர் மு.மதிவாணன், உதவி ஆணையர் சரவணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். முகாமில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரியமுறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இதுபோன்ற முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக், கொள்ளுமாறும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி தீர்வு காண வேண்டும் என மேயர் கேட்டுக்கொண்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.