திருச்சி குடமுருட்டி பாலத்தில் விபத்து: அரசு பஸ்மோதி எலக்ட்ரீசியன் பலி…
துக்க காரியத்துக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
திருச்சி குடமுருட்டி மேல சிந்தாமணி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராமு (வயது 27 ). எலக்ட்ரீசியன். இவர் திருச்சி அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ஒரு துக்க காரியத்துக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். குடமுருட்டி பாலத்தில் அவர் வந்து கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பஸ்ஸின் அடியில் சிக்கிய ராமு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் பஸ் பயணிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.