Rock Fort Times
Online News

நாமக்கல் அருகே திருமணமான நான்கு மாதத்தில் மகன் எடுத்த துயர முடிவு: துக்கம் தாங்க முடியாமல் தாய்- தந்தையும் தற்கொலை…!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள ஏ.வாழவந்தியைச் சேர்ந்தவர் சுரேந்திரன்(28). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சினேகா(24). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சினேகா, கணவரைப் பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேந்திரன், இன்று (15-12-2024) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தூங்கி எழுந்த சுரேந்திரனின் தந்தை செல்வராஜும்(55), தாய் பூங்கொடியும்(50) தங்கள் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகன் பிரிவை தாங்க முடியாத அவர்கள் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார், சம்பல இடத்திற்கு விரைந்து வந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சுரேந்திரனின் மனைவி சினேகா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்